கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளத்தனமாக விற்கப்பட்ட பாக்கெட் சாராயத்தை குடித்த பலர் உயிரிழந்துள்ளனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் மட்டுமல்ல; நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தில் உண்மை தன்மையை முழுமையாக அறியாமல் பொறுப்பற்ற முறையில் அவசர கோலத்தில் விளக்கம் அளித்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய சிங் மீனா உள்பட பல காவல்துறை அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காவல்துறையினருக்கும், வருவாய்த்துறையினருக்கும் தெரியாமல் எந்த சம்பவமும் நாட்டில் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. அப்படி இருக்கும் போது இந்த சாராய சாவு எப்படி நடந்தது?! இதற்கு தமிழக அரசுதான் பதில் அளிக்க வேண்டும்.
-Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040