தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின், தேர்தல் ஆணையம் 2024, ஜூன் 1 அன்று வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பதிவுகளை சர்பார்க்கக் கோரி, 2024 மக்களவைத் தேர்தல் தொடர்பாக 8 மனுக்களும், மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் தொடர்பாக 3 மனுக்களும் தேர்தல் ஆணையத்திற்கு வரபெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து வரப்பெற்ற விண்ணப்பங்களின் விவரம் வருமாறு:
வ.எண் | மாநிலத்தின் பெயர் | 2-இடம் அல்லது 3-ம் இடம் பெற்ற வேட்பாளரிடமிருந்து வரப்பெற்ற வேண்டுகோள்(கட்சி சார்புடையவராக இருந்தால் அதன் விவரம்) | மக்களவை தொகுதியின் பெயர் | சட்டப் பேரவை தொகுதியின் பெயர் | சரிபார்க்கப் பட வேண்டிய வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை |
1 | தமிழ்நாடு | பிஜேபி | வேலூர் | வேலூர்அணைக்கட்டுகே வி குப்பம்குடியாத்தம்வாணியம்பாடிஆம்பூர் | 111111 |
தேமுதிக | விருதுநகர் | விருதுநகர் | 14 | ||
மொத்தம் | 20 |
சரிபார்க்கப்படவேண்டிய இயந்திரங்கள் மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்த விரிவான, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் 2024, ஜூன் 1 அன்று வெளியிட்டு இருந்தது.
இதன்படி சம்பந்தப்பட்ட மாநில தலைமைத்தேர்தல் அதிகாரி, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதிலிருந்து 30 நாட்களுக்குள் உற்பத்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்து, விண்ணப்பதாரர்களின் ஒருங்கிணைந்த பட்டியலை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
அ-து. 2024, ஜூலை 4-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்டதற்கு 15 நாட்களுக்கு முன்பாக உற்பத்தியாளர்களுக்கும் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்க வேண்டும்.
எஸ்.சதிஸ் சர்மா