சாராய சாவு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!-மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம்.

கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும், உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களையும், அவர்களது குடும்பத்தாரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை. தமிழகத்தையே அதிர்ச்சியிலும் வேதனையிலும் தள்ளியிருக்கிறது கள்ளக்குறிச்சியில் நடந்துள்ள கள்ளச்சாராய இறப்புகள். மகனை இழந்துள்ள பெற்றோர், கணவனை இழந்துள்ள பெண்கள், தந்தையை இழந்துள்ள குழந்தைகள் என, கள்ளக்குறிச்சியில் கண்ணீரில் தத்தளிக்கும் குடும்பத்தினருக்கு, ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்தத் துயரத்தில் இருந்து மீண்டு வர அனைவருடனும் தமிழக பாஜக உறுதுணையாக இருக்கும்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவாக நலம்பெற, இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக பாஜக சார்பாக, தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

முழுக்க முழுக்க திமுக அரசின் கையாலாகாத்தனத்தால் நடந்துள்ள இந்த துயர சம்பவத்தில், அதிகாரிகள் மீது மட்டும் பழி போட்டு, பிரச்சினையை மூடி மறைத்து விடலாம் என்ற எண்ணத்தில் திமுக இருந்தால், அதைப் பார்த்துக் கொண்டு தமிழக பாஜக சும்மா இருக்காது என்று எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் என்று குறிப்பிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. இதைக் கண்டித்து தமிழக பாஜகவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.

அத்தோடு இருந்து விடாமல் இந்த சாராய சாவு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளார்.அக்கடிதத்தின் உண்மை நகல் நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு நாம் பதிவு செய்துள்ளோம்.

கே.பி.சுகுமார் B.E., ullatchithagaval@gmail.com

Leave a Reply