நாடு முழுவதும் உள்ள மது ஆலைகளையும், மதுக்கடைகளையும் நஷ்ட ஈடு தராமல் உடனே மூடவேண்டும்!-தேசிய அளவில் பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும்!-மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, உள்ளாட்சித்தகவல் ஆசிரியர் Dr. துரை பெஞ்சமின் எழுதிய கடிதம்.

Dr .DURAI BENJAMIN , Editor & Publisher, www.ullatchithagaval.com

Honble-Shri-Amit-Shah

Hon’ble Shri Amit Shah, Union Home Minister.

பெறுநர்:

மாண்புமிகு  திரு. அமித் ஷா அவர்கள், மத்திய  உள்துறை  அமைச்சர், உள்துறை அமைச்சகம், புது தில்லி – 110001

பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும்! – பூரண மதுவிலக்கு அதுவே நமது இலக்கு.

உலகம்  முழுவதும்  சிறுவர்கள் முதல்  பெரியவர்கள்  வரை  30 கோடிப் பேருக்கும் மேல் போதைப்பொருட்களுக்கு அடிமையாக இருப்பதாக கூறப்படுகிறது. மது மற்றும் புகையிலைப் பொருட்களை  உபயோகிப்பது சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில், கஞ்சா, அபின், கோகைன், பிரவுன்சுகர் ஆகியவை கரையான் புற்று போல் இளைஞர்  சமூகத்தை அழித்து வருகின்றன.

போதைக்கு அடிமையான இளைஞர்கள் அவற்றை வாங்க பணம் கிடைக்காதபோது  குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்  என்ற  தகவல் அதிர்ச்சியளிப்பதாக  உள்ளது.

மனித குலத்தையே சீரழித்து வரும் ‘மது மற்றும் போதை” எனும் அரக்கனை இங்கு முழுமையாக ஒழித்துக்கட்டாத வரை, இங்கு மக்கள்  நிம்மதியாக வாழவும் முடியாது; சுதந்திரமாக நடமாடவும் முடியாது. குடும்ப பிரச்சனைகளுக்கும், குடும்ப வன்முறைகளுக்கும், சாலை விபத்துக்களுக்கும், சாதாரண மற்றும் கொடிய குற்றங்களுக்கும், சட்ட – ஒழுங்கு பிரச்சனைகளுக்கும், இங்கு நடக்கும் ஒட்டுமொத்த தீமைகளுக்கும், மதுவும், போதைப் பொருட்களும் தான் முழுமையான காரணம்.

மது  மற்றும் போதைப் பழக்கத்தால் நகர்ப்புற மற்றும் கிராமப்புற  குடும்ப வாழ்வியல் சூழல் முற்றிலுமாக சிதைந்து சின்னா பின்னமாகி இருக்கிறது என்பதை நினைக்கும் போது உண்மையிலுமே நெஞ்சம் பதைக்கிறது. குடிகாரர்களின் குடும்ப வன்முறையால், உயிரிழப்பால், பெண்கள் மற்றும் குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கருவறை முதல் கல்லறை வரை நலத்திட்ட உதவிகள் வழங்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். இதை யாராலும் மறுக்கவும் முடியாது; திரைப்போட்டு மறைக்கவும் முடியாது. அப்படி இருந்தும் இங்கு உள்ள மக்களின் வாழ்க்கை தரம் சுபிட்சமாக இல்லை. அதற்கு முக்கிய காரணம் மது-போதை தான்.

 மது வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு; உடலுக்கும் கேடு என்று மது பாட்டிலில் அச்சிட்டு, நாடு முழுவதும் வீதிக்கு வீதி, சந்துக்கு சந்து அரசாங்கமே நேரடியாக மது விற்பனை செய்து வருவது, தாய் தான் பெற்ற குழந்தைகளை விஷம் வைத்துக் கொள்வதற்கு சமம்.

மேலும், மது விநியோகம் மற்றும் மது விற்பனை செய்யும் பணிகளில் படித்த இளைஞர்களை பணியமர்த்தியிருப்பது, அவர்களை கண்காணிப்பதற்கு ஐ.ஏ.எஸ் மற்றும் அதற்கு சமமான அந்தஸ்தில் உள்ள படித்தவர்களை தலைமை அதிகாரிகளாக அமர்ந்திருப்பது, இது ஒரு வரலாற்று களங்கம். இதை ஒரு தேசக்குற்றமாகவும், தேசிய அவமானமாகவும் நாம் ஒவ்வொருவரும் கருத வேண்டும். குழந்தைகளின் வருமானம் மட்டும் அவமானம் அல்ல! மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானமும் இந்த தேசத்திற்கு அவமானம் தான்.

மதுவின் மூலம் கிடைக்கும் வருமானத்தை ஈடு கட்டுவதற்கு நேர்மையான முறையில் ஏராளமான வழிமுறைகள் இருக்கிறது. எனவே, மது விற்பனையை நம்பி தான் அரசாங்கம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை.

மேலும், டாஸ்மாக் (TASMAC) பணியாளர்கள் அனைவருக்கும் மாற்று வேலை வழங்கி மற்ற அரசு பணியாளர்களைப் போலவே அவர்களையும் கௌரவமாக வாழ வைக்க வேண்டும்.

பூரண மதுவிலக்கு அமல்படுத்தினால் மது நோயாளிகள் அனைவரும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள் என்ற வாதத்தில் கடுகளவும் உண்மை இல்லை என்பது ‘கொரோனா’ காலக்கட்டத்தில் நிரூபணம் ஆகிவிட்டது. எனவே, அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை.

பூரண மதுவிலக்கு அமல்படுத்தினால் கள்ள சாராயம் தலைவிரித்தாடும். அதை கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று சொல்வதை நடைமுறையில் ஏற்க முடியாது.

ஏனென்றால், காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் ஒரு சொட்டு மது கூட இங்கு யாரும் விற்க முடியாது என்பது தான் கசப்பான உண்மை.

எனவே, நாடு முழுவதும் உள்ள மது ஆலைகளையும், மதுக் கடைகளையும் நஷ்ட ஈடு தராமல்  உடனே  மூடவேண்டும்.  காந்தி  தேசத்தில் ஒரு சொட்டு மது கூட விற்பனை செய்யக்கூடாது. மருந்து மற்றும் இரசாயன பயன்பாட்டிற்கு மட்டும் தான் மதுவைப் பயன்படுத்தவேண்டும். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்பட தேசிய அளவில் பூரண மதுவிலக்கை உடனே அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்தியா  உண்மையான தூய்மை இந்தியாவாக மாறும்.

-Dr. துரைபெஞ்சமின், BAMS., M.A.,SOCIOLOGY, Ex. Honorary A.W.Officer, Govt Of India, Editor & Publisher, www.ullatchithagaval.com Director, UTL MEDIA OPC PVT LTD, editorutlmedia@gmail.com Mobile No.98424 14040

Dr. DURAI BENJAMIN , Editor & Publisher, www.ullatchithagaval.com

Hon’ble Shri Amit Shah, Union Home Minister.

To.

Hon’ble Shri Amit Shah, Union Home Minister, Ministry of Home Affairs, New Delhi – 110001.

Complete prohibition should be implemented immediately! Complete abstinence is our goal..!

It is said that more than 30 crore people worldwide, from children to adults, are addicted to drugs. While the use of alcohol and tobacco products has become commonplace, marijuana, opium, cocaine, and brown sugar are destroying the youth community like termites.

It is shocking to know that young drug addicts turn to crime when they do not have money to buy them.

People cannot live in peace here until the demon of ‘alcohol and drug addiction’, which is corrupting the human race, is completely eradicated here; Cannot move freely. Alcohol and drugs are the absolute cause of family problems, family violence, road accidents, ordinary and heinous crimes, law and order problems and all the evils that happen here.

It is truly heart-wrenching to think that the urban and rural family life environment has been completely destroyed and fragmented by alcohol and drug addiction. Women and children are heavily affected by the domestic violence and loss of lives of alcoholics.

Tamil Nadu is the only state that provides welfare assistance from womb to grave. No one can deny this; Can’t hide behind a curtain. Even so, the standard of living of the people here is not good. The main reason is alcohol addiction.

Alcohol is bad for the home, bad for the country; Printing on the bottle of alcohol that it is harmful to the body and directly selling alcohol from street to street and alley to alley across the country is equivalent to mother poisoning her own children.

Also, employing educated youths in liquor distribution and selling jobs, with IAS and equivalent rank educated officers sitting as head officers to supervise them, is a historical stigma. Every one of us should consider this as a national crime and a national shame. Children’s income is not the only shame! Income from alcohol sales is also a disgrace to this nation.

There are plenty of honest ways to offset alcohol income. Therefore, there is no need for the government to rely solely on the sale of liquor.

Also, all the TASMAC employees should be given alternative jobs and they should live with dignity like other government employees.

It has been proved in the ‘Corona’ period that the argument that all alcohol patients will be affected physically and mentally if complete prohibition of alcohol is implemented is not true. So, no need to worry about it.

If complete prohibition is implemented, counterfeit liquor will be rampant. It is practically unacceptable to say that controlling it is not an easy task. It is a bitter truth that no one can sell even a drop of alcohol here without the knowledge of police and revenue officials.

Liquor factories and liquor shops across the country should be closed immediately without compensation. Not even a drop of alcohol should be sold in Gandhi’s country. Alcohol should be used only for medicinal and chemical purposes. Complete prohibition should be implemented immediately at the national level including all states and union territories. Only then will India become a truly clean India.

Dr. DURAI BENJAMIN, BAMS., M.A.,SOCIOLOGY, Ex. Honorary A.W.Officer, Govt Of India, Editor & Publisher, www.ullatchithagaval.com Director, UTL MEDIA OPC PVT LTD, editorutlmedia@gmail.com Mobile No. 98424 14040

Dr. DURAI BENJAMIN , Editor & Publisher, www.ullatchithagaval.com

Hon’ble Shri Amit Shah, Union Home Minister.

To.

माननीय श्री अमित शाह, केंद्रीय गृह मंत्री, गृह मंत्रालय, नई दिल्ली-110001.

तत्काल पूर्ण शराबबंदी लागू की जाये! – पूर्ण संयम ही हमारा लक्ष्य है..!

कहा जाता है कि दुनिया भर में बच्चों से लेकर वयस्कों तक 30 करोड़ से ज्यादा लोग नशे के आदी हैंजहाँ शराब और तम्बाकू उत्पादों का उपयोग आम हो गया है, वहीं मारिजुआना, अफ़ीम, कोकीन और ब्राउन शुगर युवा समुदाय को दीमक की तरह नष्ट कर रहे हैं

यह जानकर हैरानी होती है कि नशे की लत वाले युवा तब अपराध की ओर मुड़ जाते हैं जब उनके पास इसे खरीदने के लिए पैसे नहीं होते।

जब तक मानव जाति को भ्रष्ट करने वालाशराब और नशाका दानव यहां से पूरी तरह समाप्त नहीं हो जाता, तब तक लोग यहां शांति से नहीं रह सकते; स्वतंत्र रूप से घूम नहीं सकते. शराब और नशीली दवाएं पारिवारिक समस्याओं, पारिवारिक हिंसा, सड़क दुर्घटनाओं, सामान्य और जघन्य अपराधों, कानून और व्यवस्था की समस्याओं और यहां होने वाली सभी बुराइयों का मूल कारण हैं

यह सोचना वाकई दिल दहला देने वाला है कि शराब और नशीली दवाओं की लत से शहरी और ग्रामीण पारिवारिक जीवन का माहौल पूरी तरह से नष्ट और खंडित हो गया हैघरेलू हिंसा और शराबियों की जान गंवाने से महिलाएं और बच्चे काफी प्रभावित होते हैं

तमिलनाडु एकमात्र राज्य है जो गर्भ से कब्र तक कल्याण सहायता प्रदान करता हैइससे कोई इनकार नहीं कर सकता; पर्दे के पीछे छिप नहीं सकते. फिर भी यहां के लोगों का जीवन स्तर अच्छा नहीं हैइसका मुख्य कारण शराब की लत है

  शराब घर के लिए बुरी है, देश के लिए बुरी है; शराब की बोतल पर यह छापना कि यह शरीर के लिए हानिकारक है और सीधे पूरे देश में गलीगली और गलीगली शराब बेचना माँ द्वारा अपने ही बच्चों को जहर देने के बराबर है

साथ ही शराब वितरण और बिक्री के काम में पढ़ेलिखे युवाओं को नियोजित करना और उनकी निगरानी के लिए आईएएस और समकक्ष रैंक के शिक्षित अधिकारियों को मुख्य अधिकारी के रूप में बैठाना एक ऐतिहासिक कलंक हैहममें से हर किसी को इसे राष्ट्रीय अपराध और राष्ट्रीय शर्म मानना ​​चाहिए।’ बच्चों की कमाई ही एकमात्र शर्म की बात नहीं! शराब की बिक्री से होने वाली आय भी इस देश के लिए अपमान है

शराब से होने वाली आय की भरपाई करने के बहुत सारे ईमानदार तरीके हैंइसलिए सरकार को सिर्फ शराब की बिक्री पर निर्भर रहने की जरूरत नहीं है.

साथ ही, सभी TASMAC कर्मचारियों को वैकल्पिक नौकरियां दी जानी चाहिए और उन्हें अन्य सरकारी कर्मचारियों की तरह सम्मान के साथ रहना चाहिए।

कोरोनाकाल में यह सिद्ध हो गया है कि यह तर्क सत्य नहीं है कि पूर्ण शराबबंदी लागू होने पर शराब के सभी मरीज़ शारीरिक और मानसिक रूप से प्रभावित होंगेतो, इसके बारे में चिंता करने की कोई जरूरत नहीं है

पूर्ण शराबबंदी लागू हुई तो नकली शराब का बोलबाला हो जायेगा. यह कहना व्यावहारिक रूप से अस्वीकार्य है कि इसे नियंत्रित करना कोई आसान काम नहीं हैयह कड़वी सच्चाई है कि पुलिस और राजस्व अधिकारियों की जानकारी के बिना यहां कोई शराब की एक बूंद भी नहीं बेच सकता

देशभर में शराब की फैक्ट्रियां और शराब की दुकानें बिना मुआवजे के तुरंत बंद की जानी चाहिएगांधी के देश में शराब की एक बूंद भी नहीं बिकनी चाहिए. शराब का उपयोग केवल औषधीय और रासायनिक प्रयोजनों के लिए किया जाना चाहिएसभी राज्यों एवं केंद्र शासित प्रदेशों सहित राष्ट्रीय स्तर पर पूर्ण शराबबंदी तत्काल लागू की जाये. तभी भारत वास्तव में स्वच्छ भारत बन सकेगा

-Dr. DURAI BENJAMIN, BAMS., M.A.,SOCIOLOGY, Ex. Honorary A.W.Officer, Govt Of India, Editor & Publisher, www.ullatchithagaval.com Director, UTL MEDIA OPC PVT LTD, editorutlmedia@gmail.com Mobile No. 98424 14040

.

Leave a Reply