2024 ஜூன் 16 முதல் 23 வரை பிரான்சின் செயிண்ட்-ட்ரோபெஸில் நடைபெற்ற 43வது உலக மருத்துவ மற்றும் சுகாதார விளையாட்டுப் போட்டிகளில் நான்கு ஆயுதப்படை மருத்துவ சேவை (ஏஎப்எம்எஸ்) அதிகாரிகள் 32 பதக்கங்களை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். லெப்டினன்ட் கர்னல் சஞ்சீவ் மாலிக், மேஜர் அனிஷ் ஜோர்ஜ், கேப்டன் ஸ்டீபன் செபாஸ்டியன், கேப்டன் டானியா ஜேம்ஸ் ஆகிய அதிகாரிகள், சுகாதார நிபுணர்களுக்கான உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வில் 19 தங்கப் பதக்கங்கள், 09 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 04 வெண்கலப் பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளனர்.
ஏ.எஃப்.எம்.எஸ் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் தல்ஜித் சிங், இந்த செயல்திறனுக்காக அதிகாரிகளைப் பாராட்டியதோடு, எதிர்காலத்தில் அவர்கள் மேலும் பெருமை சேர்க்க வாழ்த்தினார்.
சுகாதார நிபுணர்களுக்கான ஒலிம்பிக் விளையாட்டுகளாக பெரும்பாலும் கருதப்படும் உலக மருத்துவ மற்றும் சுகாதார விளையாட்டுகள், மருத்துவ சமூகத்திற்குள் மிகவும் மதிப்புமிக்க உலகளாவிய விளையாட்டு நிகழ்வாக உருவாகியுள்ளது. 1978 ஆம் ஆண்டிலிருந்து ஒரு பாரம்பரியத்துடன், விளையாட்டுகள் ஆண்டுதோறும் 2500 க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை ஈர்க்கின்றன.
இந்திய ஆயுதப்படை மருத்துவ சேவை அதிகாரிகளின் நிகழ்ச்சிகள் அவர்களின் சிறப்பை எடுத்துக்காட்டுவது மட்டுமல்லாமல், உலகளவில் சுகாதார நிபுணர்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன, இது நாடு முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடல் தகுதியின் தூதர்களாக மாறுவதற்கு இது உத்வேகம் அளிக்கும்.
எஸ்.சதிஸ் சர்மா