அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2025 மார்ச் 31 வரை கோதுமைக்கான இருப்பு வரம்பை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

ஒட்டுமொத்த உணவுப்பாதுகாப்பை நிர்வகிப்பதற்கும், சேமிப்பு மற்றும் நேர்மையற்ற ஊகங்களைத் தவிர்ப்பதற்கும், அனைத்து மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், பெரிய தொடர் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பதப்படுத்துவோருக்கும் பொருந்தக் கூடிய கோதுமை மீதான இருப்பு வரம்புகளை நிர்ணயிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், இன்று முதல் அதாவது 2024 ஜூன் 24 முதல் 2025 மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும்.

சில்லறை விற்பனையாளர்களுக்கு, ஒவ்வொரு சில்லறை விற்பனை நிலையத்திற்கும் 10 மெட்ரிக் டன், பெரிய தொடர் சில்லறை விற்பனையாளர்களுக்கு ஒவ்வொரு விற்பனை நிலையத்திற்கும் 10 மெட்ரிக் டன் மற்றும் அனைத்து டிப்போக்களுக்கும் சேர்த்து 3000 மெட்ரிக் டன், பதப்படுத்துவோருக்கு மாதாந்தர நிறுவப்பட்ட திறனில் 70% என்பதை 2024-25 நிதியாண்டின் மீதமுள்ள மாதங்களால் பெருக்கிய அளவு, மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இந்த இருப்பு வரம்பு பொருந்தும்.  இந்த நிறுவனங்கள் உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் போர்ட்டலில் (https://evegoilsnic.in/wsp/login) இருப்பு நிலையை தெரிவிப்பதுடன் தொடர்ந்து தகவல்களைப் பதிவேற்ற வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட இவற்றில் இருப்பு அதிகமாக இருந்தால், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் அதனை நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்.

திவாஹர்

Leave a Reply