மொரீஷியஸ் நாட்டின் போர்ட் லூயிஸ் துறைமுகத்தில் இருந்து ஐஎன்எஸ் சுனைனா, தனது பயணத்தை முடித்துக்கொண்டு 22-ம் தேதி புறப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெற்ற சர்வதேச யோகா தினம் மற்றும் விளையாட்டுகளையொட்டி கூட்டு யோகா அமர்வில் இந்திய கடற்படை, மொரிஷியஸ் தேசிய கடலோர காவல்படை ஆகியவற்றைச் சேர்ந்த பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
ஐஎன்எஸ் சுனைனா பயணத்தின் போது, அதன் கமாண்டிங் அதிகாரி பிரபாத் ரஞ்சன் மிஸ்ரா, இந்தியத் தூதர் திருமதி நந்தினி சிங்லாவை சந்தித்தார். கடல்சார் பாதுகாப்பில் நம்பிக்கை ஏற்படுத்தும் பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.
மொரிஷியஸ் கடலோர காவல் படையுடன் நட்பு ரீதியிலான வாலிபால் போட்டியில் கப்பல் பணியாளர்கள் கலந்துகொண்டனர். போர்ட் லூயிசில் உள்ள கயா சிங் ஆசிரமத்துக்கு கப்பல் ஊழியர்கள் சென்று அங்குள்ள மூத்த குடிமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டதுடன், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.
ஐஎன்எஸ் சுனைனா கப்பல் பார்வையாளர்களுக்கு திறந்து விடப்பட்டது. சுமார் 200-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கப்பலுக்குச் சென்று சுற்றிப்பார்த்தனர். போர்ட் லூயிசிலிருந்து புறப்பட்ட ஐஎன்எஸ் சுனைனா, மொரீஷியசில் அடுத்தக்கட்ட கூட்டுக் கண்காணிப்பில் ஈடுபடும்.
எம்.பிரபாகரன்