ஓசூரில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் வகையில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்றும், திருச்சியில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் உரையாற்றினார். அப்போது அவர், திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருவதாகவும், அதில் மிக முக்கியமானது பெருந்தொழில்கள் என்றும், தமிழ்நாட்டை நோக்கி பல நிறுவனங்கள் உலகம் முழுவதும் இருந்து தொழில் தொடங்க வந்து கொண்டிருக்கின்றன.மேலும், இந்தத் தொழில் நிறுவனங்கள் மூலமாக தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி அடைவதோடு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாகவும், இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
சி.கார்த்திகேயன்