திருச்சி மாநகரம், அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜ் நகரில் வசித்து வரும் இஸ்மாயில் என்பவரிடம் 7 பவுன் நகையை பறித்து சென்ற வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த நசுருதீன் என்பவரை அரியமங்கலம் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் அரியமங்கலம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் தனிப்படையை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஞானபிரகாசம், வினோத், பிரபு, தலைமை காவலர் வின்சென்ட், காவலர் மணி ஆகியோர் நசுருதீனிடமிருந்து நகைகளை கைப்பற்றி எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
-கே.பி.சுகுமார். B.E., ullatchithagaval@gmail.com