விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்கப் பிரதமர் அக்கறையுடன் செயல்படுகிறார் – விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்!- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் நேற்று (29.06.2024) ஹைதராபாத்தில்,  புகையிலை விவசாயிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய அவர், 2023-24-ம் நிதியாண்டில் புகையிலை உற்பத்தி  மற்றும் ஏற்றுமதி குறித்து திருப்தி தெரிவித்தார். தற்போதைய நிலவரப்படி புகையிலை வாரியத்தால் நடத்தப்பட்ட மின்னணு ஏலத்தில் 112.35 மில்லியன் கிலோ புகையிலை விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் விவசாயிகளுக்கு சராசரியாக ஒரு கிலோவுக்கு ரூ.269.91 விலை கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

புகையிலை விவசாயிகள் மற்றும் இந்த தொழில்துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துப் பேசிய அமைச்சர், விவசாயிகளின் பிரச்சினைகளில் பிரதமர் மிகவும் அக்கறை கொண்டவர் என்றும், விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றார்.   புகையிலை விவசாயிகள் மற்றும் தொழில்துறையினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் உறுதியளித்தார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply