2022-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்தியக் குடிமைப்பணி அதிகாரிகள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் தற்போது உதவி செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 2022-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்தியக் குடிமைப்பணி அதிகாரிகள் குடியரசுத் தலைவர்  திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கலாச்சார மையத்தில் இன்று (ஜூலை 01, 2024) சந்தித்தனர்.

அப்போது பேசிய குடியரசுத் தலைவர், இந்தியக் குடிமைப்பணி  நமது நாட்டில் கனவு சார்ந்த பணி என்றும், லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்தியக் குடிமைப்பணி அதிகாரிகளாகக் திகழ்வதை எதிர்கால நோக்கமாகf கொண்டுள்ளனர் என்று கூறினார். இப்பணியில் தேர்வு அடைவதற்காக அவர்களில் பலர், கடினமாக உழைக்கின்றனர் என்று தெரிவித்தார். குடிமக்களுக்கு சேவையாற்ற இப்பணிக்கு தேர்வுப்பெற்றவர்கள் எங்கு பணியாற்றினாலும், நேர்மையுடனும், திறன்மிக்கவர்களாகவும் பணிபுரிய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

நாட்டைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும், மக்கள் உடனடியாகத் தகவல்களை அறிந்துகொள்ளும் இந்த உயர் தொழில்நுட்ப காலத்தில், அதிகாரிகளுக்கான சவால்கள் மேலும் அதிகரித்துள்ளதாக குடியரசுத் தலைவர் கூறினார். எந்தவொரு திட்டத்தின் சமூக அல்லது பொருளாதார இலக்குகளை அவர்கள் அடையும் நேரத்தில், மக்களின் தேவைகள், விழிப்புணர்வு, விருப்பங்கள் அதிகரித்திருக்கும் என்பதால், அவர்கள் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்க உதவும் அமைப்புகளை உருவாக்கத் தொடங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

மக்களின் நம்பிக்கையை பெறுவதும் அவற்றைத் தொடர்ந்து தக்க வைப்பதும் நிர்வாகிகளின் மிக முக்கியமான அம்சம் என்று திருமதி திரௌபதி முர்மு கூறினார்.

திவாஹர்

Leave a Reply