நாட்டில் மேம்படுத்தப்பட்ட பொறுப்புமிக்க செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி, ஈடுபடுத்துதல், பயன்பாடு ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் உறுதிப்பாட்டிற்கேற்ப, உலகளாவிய இந்தியா செயற்கை நுண்ணறிவு மாநாடு 2024-ஐ புதுதில்லியில் ஜூலை 3, 4 ஆகிய நாட்களில் நடத்துவதற்கு (மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்) ஏற்பாடு செய்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் நெறிமுறை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டி, ஒத்துழைப்பு, அறிவுசார் பரிமாற்றத்தை ஏற்படுத்துவதை இம்மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
அறிவியல், தொழில்துறை, சமூகம், அரசு, சர்வதேச அமைப்புகள், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த முன்னணி சர்வதேச செயற்கை நுண்ணறிவு நிபுணர்களுக்கு ஒரு புதிய தளத்தை இம்மாநாடு உருவாக்கும். உலகளாவிய செயற்கை நுண்ணறிவாளர்களிடையே, அறிவுசார் பரிமாற்றம், ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது, பொறுப்புமிக்க செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டிற்கான மத்திய அரசின் அர்ப்பணிப்பை இம்மாநாடு குறிக்கிறது. இந்த உலகளாவிய இந்தியா செயற்கை நுண்ணறிவு மாநாடு 2024 மூலம், செயற்கை நுண்ணறிவின் புதிய கண்டுபிடிப்புகளில் உலகளாவிய தலைமைத்துவமாக உருவாகவும், செயற்கை நுண்ணறிவின் பயன்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்யவும், நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் பங்களிப்பு செய்யவும் இந்தியா விரும்புகிறது.
திவாஹர்