சத்தீஷ்கரில் மக்காச்சோளம், சோயாபீன்ஸ் உற்பத்தியை ஊக்குவிக்க போதுமான வாய்ப்பிற்கு மத்திய அரசு முழு உதவி அளிக்கும்! – சிவராஜ் சிங் சவுகான்.

நாட்டில் வேளாண் துறையின் விரைவான முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு, மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் மாநில வாரியான விவாதங்களைத் தொடங்கியுள்ளார். அதன்படி சத்தீஷ்கர் வேளாண் அமைச்சர் திரு ராம்விச்சர் நீதம் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினருடன் புதுதில்லியில் உள்ள கிருஷி பவனில் இன்று அவர் ஆலோசனை நடத்தினார். சத்தீஷ்கரில் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், தோட்டக்கலை போன்றவற்றை ஊக்குவிப்பதுடன்,

வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.  பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், விவசாயிகள், வேளாண் துறையின் நலன் தங்களுக்கு முதன்மையானது என்றும், சத்தீஷ்கருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் மத்திய அமைச்சர் திரு சவுகான் கூறினார்

பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதி, பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம், தேசிய விவசாய வளர்ச்சித் திட்டம், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், தோட்டக்கலை, மகளிருக்கு நமோ ட்ரோன் பயிற்சி, எண்ணெய் பனை இயக்கம் உள்ளிட்ட வேளாண் அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்கள் குறித்து சத்தீஸ்கர் அமைச்சர் திரு நீதமுடன் மத்திய அமைச்சர் திரு சவுகான் விவாதித்தார். சத்தீஷ்கர் விவசாயிகளின் பிரச்சினைக்குத் தீர்வுகாண மத்திய அரசு தயாராக உள்ளது என்றும், இதற்காக மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்றும் மத்திய அமைச்சர் திரு சவுகான் கூறினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply