2024 ஜூன் மாதத்தில் 135.46 மில்லியன் டன் சரக்கு ஏற்றி இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது. இது கடந்த ஆண்டின் 123.06 மில்லியன் டன் சரக்குடன் ஒப்பிடுகையில் சுமார் 10.07 சதவீதம் அதிகமாகும். 2023 ஜூன் மாதத்தில் ரூ.13,316.81 கோடியாக இருந்த சரக்கு வருவாய், 2024 ஜூன் மாதத்தில் ரூ.14,798.11 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டை விட சுமார் 11.12 சதவீதம் அதிக வருவாய் பெறப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் 60.27 மில்லியன் டன் நிலக்கரி (இறக்குமதி நிலக்கரி நீங்கலாக), 8.82 மில்லியன் டன் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி, 15.07 மில்லியன் டன் இரும்புத் தாது, வார்ப்பிரும்பு, முடிக்கப்பட்ட எஃகு 5.36 மில்லியன் டன், சிமெண்ட் 7.56 மில்லியன் டன், உணவு தானியங்கள், 4.21 மில்லியன் டன், உரங்கள் 5.30 மில்லியன் டன், தாது எண்ணெய் 4.18 மில்லியன் டன், கொள்கலன்களில் 6.97 மில்லியன் டன் மற்றும் மீதமுள்ள பிற பொருட்களில் 10.06 மில்லியன் டன் ஏற்றப்பட்டுள்ளது.
எம்.பிரபாகரன்