புதுதில்லியில் உள்ள சாஸ்திரி பவனில் டிஎம்எஃப் (மாவட்ட தாது அறக்கட்டளை) காட்சிக் கூடத்தை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி இன்று (02.07.2024) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், துறையின் இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே கலந்துகொண்டார்.
இந்தக் காட்சிக்கூடம், மாவட்ட தாது அறக்கட்டளை/ பிரதமரின் கனிஜ் சேத்ர கல்யாண் திட்டத்தின் கீழ், சுரங்க நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு ஆதரவுடன் செயல்படும் சுயஉதவிக் குழுக்களின் ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்டதாகும்.
பின்னர் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடிய அமைச்சர்கள், ஒடிசாவின் கோராபுட் மற்றும் கியோஞ்சார் சுரங்கத்தைச் சேர்ந்த சுய உதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருட்களுக்கு பாராட்டுத் தெரிவித்ததுடன், இதுபோன்ற குழுவினருக்கு உறுதுணையாக செயல்படும் இந்துஸ்தான் காப்பர் மற்றும் ஹிண்டால்கோ நிறுவனங்களின் முயற்சிகளையும் பாராட்டினர்.
சிறுதானிய உணவுகள், விதைகள், தாசர் பட்டுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
திவாஹர்