நிதி ஒதுக்குவதில் கேரள மாநில பஞ்சாயத்துக்களுக்கு 15-வது நிதிக் குழுவால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில ஊடகங்களில் வெளியான தகவல்களுக்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
2015-16 முதல் 2019-20 வரையிலான காலகட்டத்தில், 14-வது நிதிக்குழு கேரள மாநில பஞ்சாயத்துக்களுக்கு ரூ.3,774.20 கோடியை வழங்கியது. அதே சமயம் 15-வது நிதிக்குழுவின் மானியமாக இந்தப் பஞ்சாயத்துகளுக்கு 2020-21 முதல் 2026-27 வரையிலான காலகட்டத்திற்கு ரூ.5,337 கோடி (28.06.2024 நிலவரப்படி) வழங்கப்பட்டுள்ளது.
15-வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி மாநில அரசுகள், மாநில நிதிக்குழுவை அமைப்பது கட்டாயமாகும். 2024-ம் ஆண்டு ஜூன் 11, ஜூன் 24 ஆகிய தேதிகளில் மாநில நிதிக்குழுக்களின் விவரங்களைக் கேட்டு அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால் கேரள மாநிலத்தைப் பொறுத்தவரை 28-ம் தேதி வரை இது குறித்த எந்தப் பதிலையும் மாநிலத்திடமிருந்து பெறப்படவில்லை என அமைச்சகம் கூறியுள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா