தரம், ஒழுங்குமுறை கட்டமைப்பின் மேம்பாட்டுக்காக, தேசியப் பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ் சோதனைக் கூடங்கள், அடிப்படைக் கட்டமைப்பு, நிறுவன ஆதரவு ஆகியவற்றுக்கு நிதி அளிப்பதற்கான திட்ட வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இவற்றை புதிய, புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகம் இன்று (04.07.2024) வெளியிட்டது.
பசுமை ஹைட்ரஜன், அதன் உபபொருள்களின் மதிப்புத் தொடரில் தொழில்நுட்பங்கள், பதப்படுத்துதல் ஆகியவற்றுக்கு தற்போதுள்ள சோதனைக் கூடங்களுக்கான நிதி இடைவெளியை அடையாளம் காண இது உதவும். பாதுகாப்பான செயல்பாடுகளை உறுதி செய்ய தற்போதுள்ள சோதனைக் கூடங்களை மேம்படுத்தவும் புதிய சோதனைக் கூடங்களை அமைக்கவும் இந்தத் திட்டம் உதவியாக இருக்கும்.
2025-26 நிதியாண்டு வரை ரூ.200 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டுடன் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும். தேசிய சூரிய மின்சக்தி நிறுவனம், திட்ட அமலாக்க முகமையாக இருக்கும்.
எம்.பிரபாகரன்