தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான கூட்டமைப்பின் 33-வது வாரியக் கூட்டம் நேற்று (4 ஜூலை 2024) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் தொடங்கியது. இந்தக் கூட்டம் இன்று (5 ஜூலை 2024) நிறைவடைகிறது. இந்தக் கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்றுள்ள இந்தியக் குழுவுக்கு சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி ஆராதனா பட்நாயக் தலைமை வகிக்கிறார்.
கூட்டத்தின் தொடக்க அமர்வில் காணொலிப் பதிவு மூலம் உரையாற்றிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா, பொதுவான இலக்குகளை அடைவதில் இந்தக் கூட்டமைப்பு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். பெண்கள், குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் ஆகியோரின் ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் இந்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அவர் கூறினார்.
33-வது கூட்டத்தில் தற்போதைய செயல்திட்டங்கள், 2026-2030 ம் ஆண்டுக்கான முன்னுரிமைகள், 2030 க்குப் பிந்தைய ஐநா வளர்ச்சி இலக்குகள் போன்றவற்றை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்படுகிறது.
எம்.பிரபாகரன்