தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் ஒரு கட்சியின் மாநில தலைவருக்கே இது போன்ற நிலை வெட்ட வெளிச்சமாக ஏற்பட்டிருப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருப்பதையே எடுத்துக்காட்டுகிறது.
காவல் துறையினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
இது போன்ற சம்பவங்கள் தமிழகத்திலே சாதாரண மக்களிடையே பயத்தை அதிகரிக்கிறது.
தமிழக அரசின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்திருக்கிறார்கள்.
எனவே தமிழக அரசு சட்டம் ஒழுங்கை முறைப்படுத்த ராணுவ ரீதியான நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கும், பகுஜன் சமாஜ் கட்சியினருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கே.பி.சுகுமார்