திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், பாப்பாக்குறிச்சியை சேர்ந்த நபர் ஒருவர் டிராக்டரில் அளவுக்கு அதிகமாக வைக்கோல் ஏற்றுக் கொண்டு திருச்சி – கல்லணை சாலை வழியாக புத்தாபுரம் – பாப்பா குறிச்சி வயல்வெளி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, குவளை வாய்க்கால் அருகே டிராக்டரில் ஏற்றிச் சென்ற வைக்கோல் மின்கம்பியில் உரசியதால் திடீரென தீ பற்றி எரிந்தது. அப்போது அந்த டிராக்டரை ஓட்டி வந்த நபர் டிராக்டரில் இருந்து குதித்து உயிர் தப்பினார். டிராக்டரில் இருந்த வைக்கோல் தீ பற்றியதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. டிராக்டரின் டயர்கள் வெடித்து சிதறியது.
உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் /(புகார் எண்: CFS22218560) சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையில் போராடி தீயை அணைத்தனர்.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040