நாட்டின் விண்வெளித்திட்ட சூழலில் குறிப்பிடத்தக்க மைல் கல்லாக சென்னை ஐஐடி உருவாக்கிய இந்தியாவின் முதலாவது செமி க்ரையோஜெனிக் என்ஜின்களுடன் அக்னிபான் செலுத்துவாகனம் 2024 மே 30 அன்று செலுத்தப்பட்டது.
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த செலுத்து வாகனத்தால் இந்தியாவிலிருந்து தொடர்ந்து விண்வெளிப் பயணங்களுக்கு வழி வகுத்ததுடன் விண்வெளித்துறையில் வர்த்தகக் குவி மையமாக நாட்டை மாற்றுவதற்கும் வழிவகுத்தது.
இந்த செலுத்து வாகனம் விண்வெளித் தொழில்நுட்பத்திற்கான அக்னிகுல் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கியதாகும். மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறையின் ஆதரவுடன் சென்னை ஐஐடி-யில் தேசிய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் மூலம் இந்த புத்தொழில் நிறுவனம் செயல்படுகிறது.
மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடனான மற்றொரு தொழில்நுட்ப கண்டுபிடிப்பு ஸ்டார்ட் அப் நிறுவனமான ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் என்பதும் சென்னை ஐஐடி மூலம் மேற்குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குதாரராக இருந்து விண்வெளித் தொழில்நுட்பங்களின் வர்த்தகமயத்திற்கு உதவுகிறது.
திவாஹர்