மத்திய அரசின் இந்திய பெருநிறுவனங்கள் விவகார நிறுவனம் தமிழகத்தின் ஊட்டியில் 3 நாள் இயக்குநர்கள் சான்றிதழ் மாஸ்டர் அமர்வை 2024, ஜூலை 10 அன்று தொடங்கியது.
இந்த 3 நாள் அமர்வில் நாடு முழுவதும் உள்ள முன்னணி அமைப்புகளின் பெருநிறுவனங்களின் 50-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் தங்கள் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் வகையில் பங்கேற்றுள்ளனர்.
தொடக்க அமர்வில் உரையாற்றிய தேசிய நிதி அறிக்கை ஆணையத்தின் தலைவர் டாக்டர் அஜய் பூஷன் பாண்டே, தற்கால பொருளாதாரத்தில் பெருநிறுவனங்களின் நிர்வாகப் பங்களிப்பின் அவசியம், தணிக்கைக் குழுக்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். ஒழுங்குமுறை கட்டமைப்புகளின் பரிணாமத்தை விளக்குவதற்காக க்ரூகர் & டோல் மற்றும் மெக்கெஸ்ஸன் & ராபின்ஸ் போன்ற வழக்குகளை அவர் குறிப்பிட்டார்.
தணிக்கையின் முக்கிய அம்சங்கள், விவரங்களின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து அவர் எடுத்துரைத்தார். வெளிப்படையான அறிக்கையை உறுதி செய்ய தணிக்கையாளர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று திரு பாண்டே வலியுறுத்தினார்.
எஸ்.சதிஸ் சர்மா