ஜி7 நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இத்தாலி செல்கிறார்.

ஜி7 வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தின் மக்கள் தொடர்பு அமர்வில் பங்கேற்க மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் 2024 ஜூலை 16, 17 தேதிகளில் இத்தாலியின் ரெஜியோ கலப்ரியாவில் பயணம் மேற்கொள்கிறார்.  இந்தப் பயணத்தின் போது, உலகளாவிய வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், ஜி 7 நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்கும் இருதரப்பு சந்திப்புகளிலும் திரு பியூஷ் கோயல் பங்கேற்கவுள்ளார்.

இத்தாலிப் பயணத்திற்கு முன்பு, திரு கோயல் 2024 ஜூலை 14, 15 ஆகிய தேதிகளில் சுவிட்சர்லாந்தில் சுவிஸ் பிரதிநிதிகளுடன் வணிகப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஐரோப்பிய தடையற்ற வர்த்தக வர்த்தக  ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவத்துவது குறித்தும் அவர் சுவிட்சர்லாந்தில் பேச்சு நடத்தவுள்ளார்.

ரெஜியோ கலப்ரியாவில் நடைபெறும் ஜி7 வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில், உலகளாவிய வர்த்தகம் குறித்தும், வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் குறித்தும் அவர் உரையாற்றவுள்ளார். 

இந்த உயர்மட்ட கூட்டங்களில் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் பங்கேற்பது இந்தியாவின் பொருளாதார உத்திகளை மேம்படுத்துவதோடு, உலக அரங்கில் நாட்டின் நலன்களை உறுதி் செய்யும்.

திவாஹர்

Leave a Reply