தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கு அளித்த வாக்குறுதியை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கைகள் கொடுக்கப்பட்டன.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல், மாற்றுத்திறனாளிகளை போராட்டக்களத்திற்கு தள்ளும் வகையில் தமிழக அரசு செயல்பட்டிருக்கிறது.
குறிப்பாக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குதல், 100 நாள் வேலை சட்ட விதிகளின் படி வேலை வழங்குதல், இலவச மனை பட்டா வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசுக்கு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினர். கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாததால் மாற்றுத்திறனாளிகள் சிரமத்தில் உள்ளனர்.
எனவே தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் மாற்றுத்திறனாளிகளை போராட்டக்களத்திற்கு தள்ளாமல் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா