ரெஜிமெனால் சிகிச்சையில் புதுமை முயற்சிகள் குறித்த இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் ஸ்ரீநகரில் நடைபெற்றது.

பாரம்பரிய முறைகளுடன் நவீன ஆராய்ச்சி முறைகளை இணைத்து, ரெஜிமெனால் சிகிச்சையில் புதுமை முயற்சிகளை புகுத்துவது குறித்த இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம், ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் இன்று (18.07.2024) தொடங்கிவைக்கப்பட்டது. மத்திய ஆயுஷ் அமைச்சத்திற்கு உட்பட்ட புதுதில்லியில் உள்ள மத்திய யுனானி மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் துணை நிறுவனமான ஸ்ரீநகரில் உள்ள மண்டல யுனானி ஆராய்ச்சி மையத்தில் இந்தக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடக்க நிகழ்ச்சியின் போது, மத்திய யுனானி மருத்துவ ஆராய்ச்சி கழகம், ஜம்மு காஷ்மீரில் உள்ள சிஎஸ்ஐஆர்-ஐஐஐஎம் (CSIR-IIIM) மற்றும் ஸ்ரீநகரில் உள்ள ஸ்கிம்ஸ் (SKIMS) இடையே 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  கையெழுத்தானது. 2 நிறுவனங்களின் துணை வேந்தர்கள் மற்றும் ஸ்கிம்ஸ் இயக்குநர் ஆகியோர், யுனானி மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து மத்திய யுனானி மருத்துவ ஆராய்ச்சி கழகத்துடன் ஒத்துழைக்க விருப்பம் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய மத்திய யுனானி மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் என் ஜாஹீர் அகமது, யுனானி மருத்துவத்தின் முக்கியமான அம்சமான ரெஜிமெனால் சிகிச்சையில் ஹிஜாமாவுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

திவாஹர்

Leave a Reply