பருவநிலை மாற்றம் குறித்த இணைப்பை புரிந்துகொள்ளுதல், பட்டினி மற்றும் வறுமை’ குறித்த உயர்மட்ட கொள்கைப் பேச்சுவார்த்தையில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை கூடுதல் செயலாளர் அமித் கோஷ் உரையாற்றினார்.

அரசு தரப்பு உயர்மட்ட அரசியல் அமைப்பான ‘பருவநிலை மாற்றம் குறித்த இணைப்பை புரிந்துகொள்ளுதல், பட்டினி மற்றும் வறுமை’ குறித்த உயர்மட்ட கொள்கைப் பேச்சுவார்த்தையில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை கூடுதல் செயலாளர் திரு அமித் கோஷ் உரையாற்றினார். மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, மத்திய ஜல்சக்திதுறை, ஜப்பான் கூட்டுறவு வளர்ச்சி முகமை (ஜிகா), நீடித்த கிரகத்திற்கான சர்வதேச கூட்டணி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்திய தண்ணீர் அறக்கட்டளை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை கூடுதல் செயலாளர் திரு அமித் கோஷ், இந்திய தண்ணீர் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் அரவிந்த் குமாரின் தொலைநோக்கு, தலைமைப் பண்பு மற்றும் அயராத முயற்சிகள், எல்லையற்ற அல்லது புவியியல் எல்லைகள் இல்லாத சவால்களை எதிர்கொள்வதற்கான உலகளாவிய உறுதிப்பாடுகளில் முக்கிய இடம் வகிப்பதாக கூறினார்.

உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ராஸ் அதனம் கெப்ரியேசஸ் உரையாற்றுகையில், முக்கியமான இந்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ததற்காகவும், நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளுக்கிடையேயான நெருங்கிய தொடர்பை எடுத்துரைத்ததற்காகவும், டாக்டர் அரவிந்த் குமார் மற்றும் இந்திய தண்ணீர் அறக்கட்டளைக்கு மிகுந்த நன்றி தெரிவித்தார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply