வளமான எதிர்காலத்திற்கு முன்னோட்டமான பட்ஜெட்!- நிதின் கட்கரி.

நவீன அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், புதிய கண்டுபிடிப்பு, அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தங்கள் சமூகத்தில் அனைத்துப் பிரிவினரின் மேம்பாடு ஆகியவற்றுடன் வளமான எதிர்காலத்திற்கு முன்னோட்டமாக 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் உள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி பாராட்டியுள்ளார்.

வேளாண்மையில் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், வேலைவாய்ப்பு, திறன்மேம்பாட்டை விரிவுபடுத்தவும், மனிதவளத்தையும், சமூக நீதியையும் உயர்த்தவும், இந்த பட்ஜெட் ஊக்கமளிக்கிறது என்று சமூக ஊடக தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னோக்கிய சிந்தனை கொண்ட இந்த பட்ஜெட், நீடித்த வளர்ச்சி, நிலையான முன்னேற்றம், உறுதியான, வளமான எதிர்காலம் ஆகியவற்றை  உறுதி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply