பல்வேறு முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் 82 திட்டங்களுக்கு இந்திய தர நிர்ணய அமைவனம் அனுமதி.

ஐ.ஐ.டி, என்.ஐ.டி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆசிரிய உறுப்பினர்களுக்கான 82 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) அனுமதி அளித்துள்ளது.

இந்தத் திட்டங்கள், ஒவ்வொன்றும் பத்து லட்சம் ரூபாய் வரை பட்ஜெட், ஆறு மாத நிறைவு காலக்கெடுவுடன், கோட்பாட்டு மதிப்புரைகளுடன் மட்டும் நின்று விடாமல், விரிவான கள அளவிலான ஆய்வுகளையும் உள்ளடக்கியது. செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் தொழில்நுட்பம், மருத்துவ சாதனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நிலைத்தன்மை, பொலிவுறு நகரங்கள், டிஜிட்டல் உருமாற்றம் போன்ற அதிநவீன களங்கள் இந்த திட்டங்களில் கவனம் செலுத்தும் அம்சங்களாகும்.

நுகர்வோரைப் பாதுகாக்கும் தரநிலைகளை உருவாக்குவதையும், புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதையும் பிஐஎஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட 82 திட்டங்களைத் தவிர, மேலும் 99 திட்டங்கள் ஒதுக்கீடு செயல்பாட்டில் உள்ளன. மேலும் 66 திட்டங்கள் பயன்பாட்டில் உள்ளன.

திவாஹர்

Leave a Reply