கார்கில் போர் வீரர்களின் தியாகம் எதிர்கால தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும்: முப்படை தளபதி ஜெனரல் அனில் சவுகான்.

கார்கில் போரின் 25-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, முப்படைகளின் அனைத்து பிரிவுகளுக்கும், முப்படை தளபதி ஜெனரல் அனில் சவுகான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், கார்கில் போரில் துணிச்சலான வீரர்கள் செய்த உயர்ந்த தியாகங்கள் வீணாகாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.  இது ராணுவ வீரர்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டின் எதிர்கால தலைமுறையினருக்கும், இளைஞர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கார்கில் போரின் தனித்துவத்தை எடுத்துரைத்துள்ள முப்படைத் தளபதி, இந்தப் போர் ராணுவத்திற்கு மட்டுமல்லாமல், நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய அனைவருக்குமான பாடங்களாக இருந்தது என்று கூறினார். ரத்தம் சிந்தியதன் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களை மறக்கக் கூடாது என்றும், மீண்டும் தவறுகளை செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

ஆயுதப் படைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் குறித்து குறிப்பிட்டுள்ள ஜெனரல் அனில் சவுகான், முப்படைகளில் பெரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.  போரிடும் திறனை மேம்படுத்துதல், எந்நேரத்திலும் ஆயுதப்படையினரை போருக்கு தயாராக வைத்திருத்தல் ஆகியவை இந்த சீர்திருத்தங்கள் ஆகும் என்று ஜெனரல் அனில் சௌகான் குறிப்பிட்டார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply