“வடகிழக்கு மாநிலங்களின் விரைவான வளர்ச்சி” குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவெளி கருத்தரங்கு.

வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவன் இணைப்பில் பட்ஜெட்டுக்குப் பிந்தைய “வடகிழக்கு மாநிலங்களின் விரைவான வளர்ச்சி” என்ற இணையக் கருத்தரங்கை வியாழக்கிழமை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சிக்கு வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் தலைமை தாங்கினார். அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சல் குமார், எட்டு வடகிழக்கு மாநிலங்களின் திட்டச் செயலாளர்கள், நிதிச் செயலாளர்கள் மற்றும் இருப்பிட ஆணையர்கள், நிதி அமைச்சகத்தின் மூத்த அரசு அதிகாரிகள் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது நிதிப் பற்றாக்குறை குறைவு, உள்கட்டமைப்பில் மூலதன செலவினங்களுக்காக ரூ 11.11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பது ஆகியவற்றைக் குறிப்பிட்டு பொருளாதார மேம்பாடுகளை அமைச்சகத்தின் செயலாளர் எடுத்துரைத்தார். இது வடகிழக்கு பிராந்தியத்தில் சிறந்த இணைப்பை உறுதி செய்யும். அமைச்சகத்தின் தற்போதைய அனைத்து திட்டங்களும் விரைவுபடுத்தப்படும் என்று உறுதியளித்த அவர், திட்டங்களுக்கு சரியான நேரத்தில் பட்ஜெட் பட்டுவாடா மற்றும் அவற்றின் ஒப்புதல் செயல்முறையை விரைவுபடுத்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை உறுதி செய்யும் அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட முக்கிய சீர்திருத்தங்களையும் கோடிட்டுக் காட்டினார்.

டாக்டர் மஜும்தார் தமது உரையில், வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை மீது நம்பிக்கை தெரிவித்தார்; “பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், வளர்ந்த பாரதத்தின் முற்போக்கான பயணம் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று கூறினார்.

ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தொடர்ந்து ஏழாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ததற்காக நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்காக ரூ.1.48 லட்சம் கோடியும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பயனளிக்கும் திட்டங்களுக்கு ரூ.3.00 லட்சம் கோடியும் ஒதுக்கப்பட்டிருப்பதை எடுத்துரைத்தார்.

2023-24 ஆம் ஆண்டில் முதல் முறையாக பிராந்தியத்தில் உண்மையான செலவினம் ரூ .1.00 லட்சம் கோடியைத் தாண்டியதற்கு டாக்டர் மஜும்தார் திருப்தி தெரிவித்தார். ரூ.6,600 கோடி செலவில் உள்கட்டமைப்பு, சமூக மேம்பாடு மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை மீண்டும் வலியுறுத்திய அமைச்சர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மையமாகக் கொண்டு ரூ.5,900 கோடி உயர்த்தப்பட்ட ஒதுக்கீட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

திவாஹர்

Leave a Reply