மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த வேளாண் ஏற்றுமதி மையத்திற்கு சர்பானந்த சோனோவால் ஒப்புதல்.

மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த வேளாண் ஏற்றுமதி மையத்திற்கு மத்திய கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள், நீர்வழித் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி திறன்களை மேம்படுத்தும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இது அமையும்.  அரசு-தனியார் கூட்டு முயற்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

67,422 சதுர மீட்டர் பரப்பளவில் துறைமுகத்தில் அனைத்து வசதிகளும் அடங்கிய அதி நவீன மையத்தை ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் நிறுவவுள்ளது.  இந்த முன்னோடித் திட்டம்  தளவாடங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும். விவசாய பொருட்களின் அடுக்கு ஆயுளை நீட்டிக்கும். எதிர்பார்க்கப்படும் நன்மைகளில் விவசாய பொருட்களுக்கு சிறந்த விலை, வேலை உருவாக்கம் மற்றும் விவசாயத் துறையில் ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகியவை அடங்கும். இது விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும். தேவையை அதிகரிப்பதுடன், கிராமப்புற வளர்ச்சியை தூண்டும்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் வேளாண் ஏற்றுமதி திறன்களை மேம்படுத்துவதுடன்  மட்டுமல்லாமல், விவசாயிகள் மற்றும் கிராமப்புற சமூகங்களை ஆதரிக்கும் ஒரு வலுவான உள்கட்டமைப்பை உருவாக்க உறுதிபூண்டுள்ளது. ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இந்த அனைத்து வசதிகளையும் ஒரே இடத்தில் கொண்ட விவசாய மையத்தை உருவாக்குவதன் மூலம் சரக்கு போக்குவரத்து சீரடையும். விரயங்கள் குறையும். வேளாண் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். இது நமது விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதிலும், இந்தியாவின் விவசாயத் துறையை மேம்படுத்துவதிலும் ஒரு குறிப்பிடத்தக்கபடியாகும்” என்று அமைச்சர் திரு சோனோவால் கூறினார்.

திவாஹர்

Leave a Reply