புதிய தேசிய கல்விக் கொள்கையின் 4- வது ஆண்டு நிறைவு: “கல்வி வாரம்” என்ற ஒரு வார கால இயக்கத்தின் மூலம் கொண்டாடுகிறது கல்வி அமைச்சகம்.

புதிய தேசிய கல்விக் கொள்கை -2020-ன் 4 வது ஆண்டு நிறைவை கல்வி அமைச்சகம் “சிக்ஷா சப்தா” (கல்வி வாரம்) என்ற ஒரு வார கால இயக்கத்துடன் மத்தியக் கல்வி அமைச்சகம் கொண்டாடுகிறது. 7-ம் நாளில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் வித்யாஞ்சலி எனப்படும் தன்னார்வ நிகழ்ச்சிகள், திதி போஜன் எனப்படும் உணவு வழங்கும் முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் கல்வியில் சமூக ஈடுபாடு வலியுறுத்தப்படுகிறது.

கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி, எழுத்தறிவுத் துறையால் நடத்தப்படும் பள்ளி தன்னார்வ மேலாண்மைத் திட்டமான வித்யாஞ்சலி, பிரதமர் திரு நரேந்திர மோடியால் 7 செப்டம்பர் 2021 அன்று தொடங்கப்பட்டது. இந்த திட்டம் பள்ளிகளை வலுப்படுத்துவதையும்,  நாடு முழுவதும் தனியார் துறை ஈடுபாடு மூலம் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, பள்ளிக் கல்வி, எழுத்தறிவுத் துறை பள்ளிகளுக்கான பரிந்துரைக்கப்பட்ட செயல்பாடுகளின் பட்டியலை வழங்கியுள்ளது.

இந்த கல்வி வாரம் 2024 ஜூலை 22 முதல் ஜூலை 28 வரை நடைபெறுகிறது.

திவாஹர்

Leave a Reply