கர்நாடகாவில் கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கு ஊக்கம்.

கர்நாடகாவில் கிராமப்புற இணைப்பு வசதியை வலுப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் 23.766 கி.மீ. தொலைவுக்கான 18 சாலைகள் மற்றும் 2 பாலங்களை கட்ட பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் கீழ் ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டம் ரூ 8.25.1796 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த முன் முயற்சி:

– கிராமப்புறங்களில் இணைப்பு வசதிகளை மேம்படுத்தி, கிராமங்களுக்கும், நகர்ப்புற மையங்களுக்கும் இடையிலான இடைவெளியை சரி செய்வதன் வாயிலாக, எளிதில் பாதிப்புக்கு ஆளாகக் கூடிய பழங்குடியின குடும்பங்கள் மற்றும் குடியிருப்புகளை தன்னிறைவு பெற செய்வதன் மூலம், எளிதில் பாதிப்புக்கு ஆளாகக் கூடிய பழங்குடியின குழுக்களின் சமூக- பொருளாதார சூழல்களை மேம்படுத்தும்

– இந்தப் பிராந்தியத்தில் பொருளாதார மேம்பாடு, வர்த்தகம் மற்றும் வணிகத்தை  மேம்படுத்தும் 

–  வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளூர் பொருளாதாரத்தை விரைவுபடுத்தும்

– வளமான மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற அரசின் தொலைநோக்கிற்கு ஏற்ப அமையும்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply