ஆவின் நிறுவனத்தின் சார்பில் ரூ.43.61 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார் ..!

ஆவின் நிறுவனத்தின் சார்பில் ரூ.43.61 கோடி ரூபாய் மதிப்பிலான 4 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய கால்நடை தீவன தொழிற்சாலை அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் (ஆவின்) சார்பில் 10 கோடியே 61 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 50,000 லிட்டர் பால் உற்பத்தித் திறன் கொண்ட 2 பால் பண்ணைகள், 5,000 லிட்டர் திறன் கொண்ட தயிர் மற்றும் மோர் தயாரிக்கும் ஆலை மற்றும் ஆய்வகக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து, கடலூர் மாவட்டம், ம.பொடையூரில் 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை தீவன தொழிற்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply