கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நிவாரணம் மற்றும் ஆதரவை வழங்க பேரிடர் நிவாரண குழுக்களை இந்திய கடலோர காவல் படை ஈடுபடுத்துகிறது.

இந்திய கடலோர காவல்படையின் மாவட்ட தலைமையகம் (கேரளா, மாஹே), பேப்பூர் இந்திய கடலோர காவல் படை தளம் ஆகியவை கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 2024 ஜூலை 30 அன்று பேரிடர் நிவாரணக் குழுக்களை அனுப்பியுள்ளன. பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில், உயர்தர பயிற்சி பெற்ற இந்திய கடலோர காவல் படை பணியாளர்கள் மற்றும் மருத்துவக் குழுவை உள்ளடக்கியவர்கள் பேரிடர் நிவாரணக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

மீட்புப் பணிகளுக்காக ரப்பர் படகுகள், பாதுகாப்புக்கான லைஃப் ஜாக்கெட்டுகள், பாதகமான வானிலை நிலைமைகளில் பணியாற்றுவோரின் பாதுகாப்பிற்காக மழைக்கு பயன்படுத்தப்படும் கோட்டுகள், குப்பைகளை அகற்றுவதற்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளை அணுகுவதற்குமான கருவிகளுடன் இந்த குழுவினர் சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவுப் பொருட்கள், குடிநீர் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களையும் இந்திய கடலோர காவல் படை அனுப்பியுள்ளது.

எம்.பிரபாகரன்

https://www.facebook.com/share/v/sDHJWXrmno7uGKoQ/?mibextid=oFDknk

Leave a Reply