கல்லூரியில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் ஆகஸ்ட் 9ம் தேதி தொடக்கம் !- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

கல்லூரியில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் ஆகஸ்ட் 9ம் தேதி கோவையில் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”கொளத்தூர் தொகுதிக்கு வரும்போது என்னையே அறியாமல் புதிய உற்சாகம் பிறக்கிறது. முடிந்த அளவுக்கு 10 நாளுக்கு ஒருமுறையோ வாரத்துக்கு ஒரு முறையோ கொளத்தூருக்கு வருகிறேன். நமது பணிகளால் கொளத்தூர் தொகுதியாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். கொளத்தூரில் புதிய சார்-பதிவாளர் அலுவலகம், காவல்துறை துணை ஆணையர் அலுவலகம், புதிய வட்டாட்சியர் அலுவலகம் அமைய உள்ளன. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் திட்டங்களை கொண்டு வாருங்கள். ஆளுங்கட்சி மட்டுமில்லாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தொகுதிக்கு தேவையான திட்டங்களை கொண்டு வர வேண்டும். , என்றார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply