முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டத்தை, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் தமிழ்நாடு அரசு விரிவுபடுத்தி உள்ளது. அந்த வகையில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை சிற்றுண்டியின் தரத்தை ஆய்வு செய்யும் விதமாக, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்க வட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், அல்லூர் கிராமத்தில் உள்ள பாரதி அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அப்பள்ளி மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்டு, காலை உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.
கர்நாடக மாநிலத்தில் கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்நிலையில் அவ்வழியாகச் சென்ற அமைச்சர் உதயநிதி திருச்சி மேலணையை (முக்கொம்பு) இன்று பார்வையிட்டார்.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040