தற்போது, நாடு முழுவதும் உள்ள நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்களின் 537 அலகுகளில் ஃப்ளூ கேஸ் டிசல்பிரைசேஷன் (எப்ஜிடி) நிறுவப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள அனல் மின் நிலையங்களில் எப்ஜிடி கருவிகள் நிறுவலின் தற்போதைய நிலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
FGD நிலை | கொள்ளளவு கொண்ட அலகுகளின் எண்ணிக்கை |
FGD நிறுவப்பட்டது | 39 (19,430 மெகாவாட்) |
வழங்கப்பட்ட / நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஒப்பந்தம் | 238 (1,05,200 மெகாவாட்) |
ஒப்பந்தப்புள்ளி பரிசீலனையில் பல்வேறு நிலைகளில் உள்ளது | 139 (42,847 மெகாவாட்) |
டெண்டருக்கு முந்தைய செயல்பாட்டில் | 121 (36,683 மெகாவாட்) |
எப்ஜிடி நிறுவலை (பிரிவு வாரியாக) நிறைவு செய்த அனல் மின் நிலையங்களின் எண்ணிக்கை (அனல் மின் நிலையங்கள்) விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
வகை | FGD நிறுவல் முடிந்தது (அலகுகள் & திறன்) |
A | 11 (4,390 மெகாவாட்) |
B | 2 (1,160 மெகாவாட்) |
C | 26 (13,880 மெகாவாட்) |
மொத்தம் | 39 (19,430 மெகாவாட்) |
சில அனல் மின் நிலையங்கள் எஃப்.ஜி.டி நிறுவுவதில் தாமதத்தை எதிர்கொண்டுள்ளன. அனல் மின் நிலையங்களில் FGD அமைப்பை அமல்படுத்தும்போது எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் / சவால்கள் பின்வருமாறு:
FGD தொழில்நுட்பம் நம் நாட்டிற்கு புதியதாக இருப்பதால், தற்போது FGD பாகங்களை வழங்குவதற்கும் நிறுவுவதற்கும் வரையறுக்கப்பட்ட திறனுடன் வரையறுக்கப்பட்ட விற்பனையாளர்கள் உள்ளனர். FGD நிறுவலுக்கான விற்பனையாளர்களின் திறன் நாட்டில் சுமார் 16-20 GW (33 முதல் 39 அலகுகள்) ஆகும் மற்றும் நிறுவலுக்கான நேரம் சுமார் 44 முதல் 48 மாதங்கள் ஆகும். அனைத்து அனல் மின் உற்பத்தி அலகுகளும் குறுகிய காலத்திற்குள் SO2 உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்பதால் தேவை திடீரென எழுந்துள்ளது, இது FGD உபகரணங்களின் தேவைக்கும் வழங்கலுக்கும் இடையே பெரும் இடைவெளியை உருவாக்கியுள்ளது.
இந்தியா 70% FGD கூறுகளின் உற்பத்தி திறனைக் கொண்டிருந்தது, இது காலப்போக்கில் 80% ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், இது இன்னும் பிற நாடுகளிலிருந்து இறக்குமதியைப் பொறுத்தது. மேலும், பிற நாடுகளில் இருந்து தொழில்நுட்பம், உபகரணங்கள் மற்றும் திறமையான மனிதவளத்தை இறக்குமதி செய்வதற்கு பெருமளவிலான அந்நிய செலாவணி தேவைப்படுகிறது.
எப்ஜிடி அமைப்புகளை நிறுவுவது கருத்துருவாக்கம், வடிவமைப்பு சவால்கள் போன்றவற்றில் சிரமங்களை எதிர்கொண்டது. வெவ்வேறு தளங்கள் இடக் கட்டுப்பாடுகள், லே-அவுட் மற்றும் நோக்குநிலை போன்ற வெவ்வேறு தேவைகளைக் கொண்டிருப்பதால் தரப்படுத்தலைச் செய்ய முடியவில்லை.
மேற்கண்ட பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய, விற்பனையாளர்கள் தங்கள் திறனை மேம்படுத்தவும், இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்கும் பொருட்டு அனைத்து FGD பாகங்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
05.09.2022 தேதியிட்ட மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, A, B மற்றும் C வகை (ஆலையின் இருப்பிடத்தின் அடிப்படையில்) நிலக்கரி எரியும் அனல் மின் நிலையங்களால் SO2 உமிழ்வு விதிமுறைகளை செயல்படுத்துவதற்கான கால வரம்புகள் முறையே டிசம்பர் 2024, டிசம்பர் 2025 மற்றும் டிசம்பர் 2026 ஆகும். நிலக்கரியால் இயங்கும் அனல் மின் நிலையங்கள் இந்த நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் SO2 உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும், தவறும் பட்சத்தில் SO2 உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்காததற்கான சுற்றுச்சூழல் இழப்பீடு அதற்கேற்ப அனல் மின் நிலையங்களுக்கு விதிக்கப்படும்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மின்துறை இணையமைச்சர் திரு. ஸ்ரீபாத் நாயக் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
திவாஹர்