இந்திய உடல் உறுப்பு தான தின விழாவில் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அனுப்பிரியா படேல் உரையாற்றினார்.

நாட்டில் உறுப்பு தானத்தின் மிகப்பெரிய தேவையை பூர்த்தி செய்ய இறந்த நபர்களின் உறுப்புகளை தானம் பெற வேண்டிய அவசியம் உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் கூறியுள்ளார்.

புதுதில்லியில்14வது இந்திய உறுப்பு தான தின நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர்ஒருவரது உறுப்பு தானம் 8 பேருக்கு புத்துயிர் அளிக்கும் என்றார். எண்ணற்ற மக்களின் உயிரைக் காப்பாற்றுவதன் மூலம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய சேவையாற்றிய இறந்த உடல் உறுப்பு நன்கொடையாளர்களின் குடும்ப உறுப்பினர்களை அவர் பாராட்டினார். அவர்கள் முழு நாட்டிற்கும் உத்வேகம் அளிக்கிறார்கள் என்று கூறிய அவர்மரணத்திற்குப் பிறகு தங்கள் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதியளிக்க முன்வருமாறு நாட்டு மக்களை கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு தனிநபரும்,  நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலமாக மட்டுமேஉறுப்பு தானம் – மாற்று அறுவை சிகிச்சையில் முன்னணி நாடுகளில் ஒன்றாக  இந்தியா மாற முடியும் என்று அவர் கூறினார்.

ஸ்பெயின்அமெரிக்காசீனா போன்ற பல நாடுகள் உடல் உறுப்பு தானத்தில் முன்னணியில் இருந்தாலும்சமீப காலங்களில் இந்தியா இந்தத் துறையில் சில குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்துள்ளது என்று மத்திய இணை அமைச்சர் கூறினார். மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு பெறப்பட்ட உறுப்புகள் எதுவும் வீணாகாமல் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நித்தி ஆயோக்கின் டாக்டர் வினோத் குமார் பால்உறுப்புகளின் தேவை – கிடைத்தலுக்கு இடையே உள்ள மிகப்பெரிய இடைவெளியை எடுத்துரைத்தார். உறுப்பு மாற்று சவாலை எதிர்கொள்ள அரசு மருத்துவமனைகளில் சீர்திருத்தங்களின் அவசியத்தை அவர் குறிப்பிட்டார்.

மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் திரு அபூர்வ சந்திராஉடல் உறுப்புகள் தேவைக்காக அதிக எண்ணிக்கையிலான மக்கள் பதிவு செய்வதாகவும் உறுப்பு தானம் வழங்குவது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றும் எடுத்துரைத்தார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தாலும்பெரும்பாலான உறுப்பு தானங்கள் குடும்ப உறுப்பினர்களிடையே நடப்பதால்உறுப்பு தானத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியின்போதுஇறந்த உறுப்பு தான நன்கொடையாளர்களின் குடும்ப உறுப்பினர்களை மத்திய இணையமைச்சர் பாராட்டினார். உடல் உறுப்பு தானம்மாற்று அறுவை சிகிச்சை துறையில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள்மண்டல,  மாநில உறுப்பு – திசு மாற்று அமைப்புகள்மருத்துவக் கல்லூரிகள்நிறுவனங்கள்தொழில்முறை சங்கங்கள்மருத்துவ வல்லுநர்கள்அரசு சாரா நிறுவனங்கள் போன்றவற்றிற்கான விருதுகளும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.

சிறந்த சோட்டோ (SOTTO -State Organ and Tissue Transplant Organisation) மாநிலத்திற்கான விருதை தெலுங்கானாவும்இரண்டாவது சிறந்த சோட்டோ/மாநிலத்திற்கான விருதை தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவும் பெற்றன.

திவாஹர்

Leave a Reply