கயிறு அறுந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஆற்று வெள்ளத்தில் விழுந்த வெளிமாநில இளைஞர்! காப்பாற்றி கரைச்சேர்த்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய வீரர்! -ஆபத்துக் காலத்தில் பொது நோக்கத்திற்காக உயிரை துச்சமாக மதித்து துணிச்சலுடன் செயல்பட்ட இருவருக்கும் தமிழக அரசு சார்பில் பரிசும் வீர தீர செயல்களுக்கான விருதும் வழங்க வேண்டும்.

ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய வீரர் அருண்குமார்.

ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய வீரர் அருண்குமார்.

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், காவிரியில் தண்ணீர் கரைப்புரண்டு ஓடுகிறது. வெள்ளப்பெருக்கால் காவிரி கரையோர மக்களுக்கு பாதிப்பு வந்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொள்ளிடம் ஆற்றில் பெருமளவில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில், திருச்சி, திருவானைக்கோவில், அழகிரிபுரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் இருந்த உயர் மின்னழுத்த கோபுரம் நீரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சாய்ந்தது. தண்ணீரில் மின் கசிவு ஏற்பட்டு உயிர் சேதம் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக அந்த உயர் மின்னழுத்த கோபுரத்திற்கு சென்ற மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது. மேலும், கொள்ளிடம் ஆற்றில் சாய்ந்த நிலையில் இருந்த அந்த உயர் அழுத்த மின்கோபுரத்தை கீழே விழாமல் தடுத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அதற்கான முயற்சிகளை மாவட்ட நிர்வாகமும், மின்வாரிய ஊழியர்களும், காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை ஆகியோரின் ஒத்துழைப்புடன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சாதிக்.

இந்நிலையில், உயிரை பணையம் வைத்து கயிறு (ரோப்) மூலமாக உயர் மின்னழுத்த கோபுரத்திற்கு செல்ல முயன்ற மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சாதிக் என்ற இளைஞர், கயிற்றின் உதவியுடன் சென்று கொண்டிருந்த போதே திடீரென கயிறு அறுந்து கண்ணிமைக்கும் நேரத்தில் கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் விழுந்தார். கையில் பிடித்திருந்த கயிற்றை இறுக்கமாக பிடித்துக் கொண்டு தண்ணீரை எதிர்த்து தத்தளித்துக் கொண்டிருந்தார்.

விபரீதத்தை உணர்ந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய வீரர் அருண்குமார் என்பவரை, மற்றொரு கயிறு உதவியுடன் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் கொள்ளிடம் ஆற்றுக்குள் அனுப்பினர். வெள்ள நீரில் சீறிப் பாய்ந்த அருண்குமார், நீரில் தத்தளித்து கொண்டிருந்த அந்த வெளி மாநில இளைஞரை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார். அந்த இளைஞருக்கு முதலுதவி அளித்து சிகிச்சைக்காக உடனே அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எனவே, உயிரை பணையம் வைத்து கயிறு மூலமாக உயர் மின்னழுத்த மின் கோபுரத்திற்கு செல்ல முயன்ற அந்த வெளி மாநில இளைஞரின் துணிச்சலை உண்மையிலுமே பாராட்டிதான் ஆக வேண்டும். அதேபோல் கயிறு அறுந்து விழுந்த நிலையில் கரைப்புரண்டு ஓடும் தண்ணீரில் எதிர்த்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த வெளிமாநில இளைஞரை தனது உயிரை பணையம் வைத்து மிகத் துணிச்சலுடன் சென்று அந்த இளைஞரை காப்பாற்றி கரைச் சேர்த்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய வீரர் அருண்குமார் அவர்களின் கடமை உணர்ச்சி உண்மையிலுமே மெய்சிலிர்க்க வைத்தது.

ஆபத்துக் காலத்தில் ஒரு பொது நோக்கத்திற்காக இருவருமே உயிரை துச்சமாக மதித்து துணிச்சலுடன் செயல்பட்டுள்ளனர். இந்த இருவரின் தைரியத்தையும் துணிச்சலையும் பாராட்டி இவர்கள் இருவருக்கும் தமிழக அரசு சார்பில் பரிசும், வீர தீர செயல்களுக்கான விருதும் வழங்க வேண்டும்.

Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040

Leave a Reply