கொளத்தூரில் ரூ.8.45 கோடி செலவிலான முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் .

கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.355.23 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, ரூ.8.45 கோடி செலவிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.3.25 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (5.8.2024) கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 8 கோடியே 45 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 3 கோடியே 25 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சீனிவாச நகர் 3-வது பிரதான சாலையில் புதிதாக கட்டப்படவுள்ள சென்னை துவக்கப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டினார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply