ஹைதராபாத்தின் சனத் நகரில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழக (இஎஸ்ஐசி) ஒரு நோயாளி வேறு 3 நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். சனத்நகரில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழக உயர் சிறப்பு மருத்துவமனை, மருத்துவ அறிவியல் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தியுள்ளது. 06.08.2024 அன்று, மருத்துவமனை அதன் முதல் உள்ளக சடலம் (இறந்த நோயாளி) உறுப்பு மீட்டெடுப்பை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இது அதன் மருத்துவ சேவை திறன்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான அர்ப்பணிப்பைக் குறிக்கிறது.
ஹைதராபாத் சனத்நகரில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவமனையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண், மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். மருத்துவர் சாம்சன் தலைமையிலான நரம்பியல் அறுவைச் சிகிச்சை குழுவினர், உறுப்பு தானம் பணியில் ஈடுபட்ட உதவியாளர்களுக்கு ஆலோசனை வழங்கியதுடன், தானம் செய்வதற்கு உரிய அனுமதியும் வழங்கப்பட்டது. இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனையில் கடந்த 4 ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த 50 வயது பெண் நோயாளிக்கு ஒரு சிறுநீரகம் பொருத்தப்பட்டது. மற்றொரு சீறுநீரகமும், கல்லீரலும் உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டது. அங்கு மேலும் இரண்டு பேருக்கு நன்கொடையாளரின் உறுப்புகள் பொருத்தப்பட்டன. இதன் மூலம் அவர்களின் உயிரும் காப்பாற்றப்பட்டது
டாக்டர் மது, டாக்டர் சந்தீப் மற்றும் அவர்களது குழுவினரால் உறுப்புகள் சேகரிக்கப்பட்டன. சனத்நகரில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை டாக்டர் ஜெகதீஷ்வர் மற்றும் தலைமை மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களான டாக்டர் பாண்டு ரங்கா ராவ் ஆகியோர் செய்தனர். மயக்க மருந்து குழு டாக்டர் நாகார்ஜுனா தலைமையிலும், சிறுநீரகவியல் குழு டாக்டர் தனலட்சுமி தலைமையிலும் செய்யப்பட்டனர்.
இப்போது இ.எஸ்.ஐ.சி.க்கு, ஜீவந்தனிடமிருந்து உறுப்புகளின் பங்கைப் பெறுவதற்கான மேலும் ஒரு வழி திறக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் அதிகமான நோயாளிகள் தேவையான உறுப்புகளை மாற்று அறுவை சிகிச்சை செய்து, ஆரோக்கியமான, சாதாரண சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ முடியும். இந்த புதுமையான செயல்முறை, துல்லியமாகவும் கவனத்துடனும் செயல்படுத்தப்படுகிறது, இதில் அடங்கும்
சடலத்திலிருந்து சிறுநீரகம் எடுக்கப்பட்டு, பின்னர் தேவைப்படும் காப்பீடு செய்யப்பட்ட நபருக்கு மாற்றப்பட்டது. இந்த சாதனை, உறுப்பு தானத்தை ஊக்குவிப்பதற்கும் மேம்பட்ட மாற்று அறுவை சிகிச்சை சேவைகளுக்கும் மருத்துவமனையின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுவது மட்டுமல்லாமல், மிக உயர்ந்த தரத்தில் சிக்கலான மருத்துவ நடைமுறைகளைச் செய்வதற்கான அதன் திறனையும் நிரூபிக்கிறது. மருத்துவர்கள், நிர்வாகிகள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் அடங்கிய குழுக்களிடையே, உன்னிப்பான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவை உள்ளக உறுப்பு மீட்பு செயல்முறையை உள்ளடக்கியது. இந்த சாதனை மருத்துவமனையின் மேம்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் அதன் அர்ப்பணிப்புள்ள மருத்துவ நிபுணர்களின் நிபுணத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது, மீட்டெடுப்பது முதல் மாற்று அறுவை சிகிச்சை வரை, முழு செயல்முறையும் மிகுந்த செயல்திறன் மற்றும் இரக்கத்துடன் கையாளப்படுவதை உறுதி செய்கிறது.
ஹைதராபாத்தின் சனத்நகரில் உள்ள இஎஸ்ஐசி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நவீன சுகாதார சேவைகள், புதுமையான நடைமுறைகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் மூலம், இஎஸ்ஐ பயனாளிகளின் விளைவுகளை மேம்படுத்துவதில் உறுதிபூண்டுள்ளது. இந்த நடைமுறையை வெற்றிகரமாக செயல்படுத்துவதானது, அதன் திறன்களை மேம்படுத்துவதற்கும் சமூகத்திற்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்குவதற்கும் மருத்துவமனையின் தொடர்ச்சியான முயற்சிகளை பிரதிபலிக்கிறது.
திவாஹர்