திறன் இந்தியா டிஜிட்டல் மையம்’ வேலைவாய்ப்பை அதிகரிக்கிறது.

திறன் இந்தியா டிஜிட்டல் மையம் என்பது இந்தியாவில் திறன்கள், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோரை ஒருங்கிணைக்கவும் மாற்றவும் வடிவமைக்கப்பட்ட விரிவான டிஜிட்டல் தளமாகும். தொழில்துறை தொடர்பான திறன் படிப்புகள், வேலை வாய்ப்புகள், தொழில்முனைவோர் ஆதரவு ஆகியவற்றை அணுகுவதன் மூலம் சிறந்த வாய்ப்புகளைத் தேடும் லட்சக்கணக்கான கணக்கான இந்தியர்களின் அபிலாஷைகளை இது பிரதிபலிக்கிறது. மேலும் தொழில் முன்னேற்றம் மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றலைத் தொடரும் குடிமக்களுக்கான மையமாக இது அமைகிறது.

திறன் மேம்பாட்டிற்கான டிஜிட்டல் அணுகலை எளிதாக்குதல், திறன் சூழல் அமைப்பை ஒருங்கிணைத்தல், வேலைவாய்ப்பையும் தொழில்முனைவையும் மேம்படுத்துதல், கற்றலை ஊக்குவித்தல், தகவல் நுழைவாயிலாக செயல்படுதல் ஆகியவை திறன் இந்தியா டிஜிட்டல் மையத்தின் முதன்மை நோக்கங்களில் அடங்கும்.

இதன் டிஜிட்டல் கற்றல், கூட்டாளர்களால் வழங்கப்படும் பெருந்தரவு, எந்திரக் கற்றல், பகுப்பாய்வு போன்றவற்றில் எதிர்கால படிப்புகளை வழங்குவதன் மூலம் தொழில்துறை 4.0-க்கு இந்திய பணியாளர்களை தயார்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சக இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஜெயந்த் சவுத்ரி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply