09.08.2024 அன்று கேரள மாநிலம் வயநாடு அல்லது அதன் சுற்றுப்புறங்களில், எந்தவொரு நில அதிர்வு நிலையங்களாலும் இயற்கையான நிலநடுக்கம் எதுவும் பதிவாகவில்லை என்பதை புவி அறிவியல் அமைச்சகத்தின் நில அதிர்வுக்கான தேசிய மையம் இதன்மூலம் உறுதிப்படுத்துகிறது.
வயநாடு பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இது குறித்து நில அதிர்வுக்கான தேசிய மையம் விளக்கம் அளித்துள்ளது. அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது, குவிந்துள்ள நிலையற்ற பாறைத் திரள்கள் ஒரு மட்டத்திலிருந்து மற்றொரு கீழ் மட்டத்திற்கு இடம்மாறும்போது ஏற்படும் உராய்வு ஆற்றலின் காரணமாக நிலத்தடி ஒலி அதிர்வுகளை உருவாக்கியதால் நடுக்கம் உணரப்பட்டிருக்கலாம் என அது கூறியுள்ளது.
நேற்று எந்த நிலநடுக்கமும் பதிவு செய்யப்படவில்லை என்பதால் இந்த நிலத்தடி அதிர்வு காரணமாக பீதி தேவையில்லை என புவி அறிவியல் அமைச்சகத்தின் தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது.
திவாஹர்