தமிழக அரசு, உயர்த்தியிருக்கும் பாடப்புத்தகங்களின் விலையை திரும்ப பெற வேண்டும்!- ஜி‌.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழக அரசு, மாநிலத்தில் கல்வி தான் மாணவர்களின் எதிர்காலம் என்பதை கவனத்தில் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான சமச்சீர் பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது தமிழ்நாடு பாடநுால் கழகம் சார்பில், தனியார் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்படும் பாடப்புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதாவது ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையிலான புத்தகங்கள் விலை 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரையும், ஐந்தாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான புத்தகங்கள் விலை 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையும் விலை உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் எட்டாம் வகுப்பு புத்தகத்தின் விலை 70 ரூபாய் வரையும், ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான புத்தகங்களின் விலை 50 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகரித்துள்ளதாகவும்

இதனால் தனியார் பள்ளி மாணவர்களும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களும் பாதிக்கப்படுவார்கள்.

குறிப்பாக மாணவர்கள், பெற்றோர்கள் நலன் கருதி 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடப்புத்தகங்களின் விலையை உயர்த்தாமல் இருப்பது தான் சரியானது.

எனவே தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் உயர்த்தப்பட்டுள்ள பாடப்புத்தகங்களின் விலையை திரும்ப பெற தமிழக அரசு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி‌.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply