நிலக்கரித் துறையில் ஆராய்ச்சி – மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்குவதற்கான நிலையான அறிவியல் ஆராய்ச்சிக் குழுவின் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது.

நிலையான அறிவியல் ஆராய்ச்சிக் குழுவின் (SSRC) சிறப்புக் கூட்டம் நேற்று (2024 ஆகஸ்ட் 21)  நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் திரு அம்ரித் லால் மீனா தலைமையில் புதுதில்லியில் நடைபெற்றது. நேரடியாகவும் காணோலி மூலமாகவும் என இரு வகைகளிலும் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், எஸ்எஸ்ஆர்சி உறுப்பினர்கள், பல்வேறு கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், முன்னணி சுரங்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நிலக்கரித் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் பிரத்யேகமாக கவனம் செலுத்தப்பட்டது. ஆய்வு நுட்பங்களை மேம்படுத்துதல், நிலக்கரி உற்பத்தியை அதிகரித்தல், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, நித்தி ஆயோக், சுரங்க பாதுகாப்பு இயக்குநரகம் துறைகளின் பிரதிநிதிகளும், கோல் இந்தியா லிமிடெட், என்.எல்.சி இந்தியா லிமிடெட், சிங்கரேனி கோலியரீஸ் கம்பெனி லிமிடெட், மத்திய சுரங்க திட்டமிடல் – வடிவமைப்பு நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தின் போது, நிலக்கரித் துறையில் ஆராய்ச்சி, மேம்பாட்டுத் துறையின் பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான விளக்கம் வழங்கப்பட்டது.

விளக்கத்தைத் தொடர்ந்து, பங்கேற்பாளர்கள் விரிவான ஆலோசனைகளி ஈடுபட்டனர். அத்துடன் பல முக்கிய பரிந்துரைகளையும் வழங்கினர்.

நிலக்கரித் துறையில் ஆராய்ச்சி – மேம்பாட்டின் எதிர்கால போக்கை வடிவமைப்பதற்கான ஆலோசனைகளை நிலக்கரி அமைச்சகம் கேட்டது. நிலக்கரித் துறையில் ஆராய்ச்சி – வளர்ச்சியை மேம்படுத்துதல், புத்தாக்கம், நிலைத்தன்மை, எரிசக்தி சூழலில் வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்வது ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்கான உறுதிப்பாட்டுடன் கூட்டம் நிறைவடைந்தது.

திவாஹர்

Leave a Reply