காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்ட சுற்றுச் சூழல் அனுமதிக்கேட்டு மத்திய அரசிடம் கர்நாடகா அரசு விண்ணப்பித்து இருப்பது கண்டிக்கதக்கது.
கர்நாடகா அரசு மேகதாதுவில் அணைக் கட்ட முயற்சித்த போது, மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. மேலும் கூட்டாச்சி தத்துவம், நீதிமன்ற தீர்ப்பு, மேலாண்மை ஆணைய உத்திரவு ஆகியவற்றிக்கு எதிராக கர்நாடகா அரசு மீண்டும் அணைக்கட்ட முயற்சிப்பது நியாமற்றது.
இவ்வாறு தொடர்ந்து அணைக்கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது தமிழக விவசாயிகளிடம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.
எனவே கர்நாடகா அரசு தன்னிச்சையாக அணைக்கட்ட முயற்சிப்பதை கைவிட வேண்டும். ஏற்கனவே தமிழக அரசு மேகதாதுவில் அணைகட்டுவது சம்பந்தமாக எதிா்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.
கர்நாடகா அரசு அணைக்கட்டுவது சம்பந்தமான விண்ணப்பத்தை மத்திய அரசு ஏற்க கூடாது.
தமிழக அரசு கர்நாடாக அரசின் அணைக்கட்டும் முயற்சிக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிப்பதோடு, அம்முயற்சியை முறியடிக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதமாக கர்நாடாக அரசின் அணைக்கட்டும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா