2024, ஆகஸ்ட் 25 வரை ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தியில் நிலக்கரி அமைச்சகம் உயர்வை எட்டியுள்ளது. 25.08.2024 நிலவரப்படி, 2024-25 நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி 370 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. 2023-24 நிதியாண்டின் இதே காலத்தில் 346.02 மெட்ரிக் டன் என்பதுடன் ஒப்பிடுகையில், இது 7.12 சதவீத அதிகரிப்பாகும்.
மேலும் நிலக்கரியை வெளியே அனுப்பி வைத்தலும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. 2024-25 நிதியாண்டில் 2024, ஆகஸ்ட் 25 நிலவரப்படி, 397.06 மெட்ரிக் டன் நிலக்கரி அனுப்பி வைக்கப்பட்டது. முந்தைய ஆண்டு அனுப்பிவைக்கப்பட்ட 376.44 மெட்ரிக் டன் என்பதுடன் ஒப்பிடுகையில், இதன் வளர்ச்சி விகிதம் 5.48 சதவீதமாகும்.
திவாஹர்