புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்தியாவின் உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில் தபால் தலை மற்றும் நாணயத்தையும் பிரதமர் வெளியிட்டார். உச்ச நீதிமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் மாநாடு, உள்கட்டமைப்பு மற்றும் மனித வளங்கள், அனைவருக்கும் உள்ளடக்கிய நீதிமன்ற அறைகள், நீதித்துறை பாதுகாப்பு மற்றும் நீதித்துறை நல்வாழ்வு, வழக்கு மேலாண்மை மற்றும் நீதித்துறை பயிற்சி போன்ற மாவட்ட நீதித்துறை தொடர்பான பிரச்சினைகளை விவாதிப்பதற்கான ஐந்து பணி அமர்வுகளை நடத்துகிறது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் பவள விழா கொண்டாட்டங்களுக்கு தாம் சென்றதை நினைவுகூர்ந்தார். உச்சநீதிமன்றத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டதற்கு அவர் நன்றி தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம், ஒரு நிறுவனத்துடன் மட்டும் தொடர்புடையது அல்ல, அது இந்திய அரசியலமைப்புச் சட்டம், அதன் மதிப்புகள் மற்றும் ஜனநாயகமாக பரிணமிக்கும் இந்தியாவின் பயணமும் ஆகும் என்று திரு மோடி அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்தப் பயணத்தில் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் மற்றும் ஒட்டுமொத்த நீதித்துறையும் ஆற்றிய முக்கிய பங்கை பிரதமர் கோடிட்டுக் காட்டினார். இந்த நீதித்துறை அமைப்பை ஒப்படைத்த கோடிக்கணக்கான இந்திய குடிமக்களின் பங்களிப்பையும் அவர் குறிப்பிட்டார். இந்திய மக்கள் உச்ச நீதிமன்றம் மீதோ, நீதித்துறை மீதோ ஒருபோதும் அவநம்பிக்கை காட்டியதில்லை என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். எனவே, உச்சநீதிமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம், ஜனநாயகத்தின் தாய் என்ற இந்தியாவின் பெருமைக்கு தைரியம் அளித்துள்ளது என்று பிரதமர் கூறினார். இது வாய்மையே வெல்லும் என்ற கலாச்சார பிரகடனத்தை வலுப்படுத்துகிறது. நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாகவும், அரசியலமைப்பின் 75 ஆண்டுகளைக் கொண்டாட இருப்பதாகவும் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்த நிகழ்வு பெருமையுடனும் உத்வேகத்துடனும் நிரம்பியுள்ளது என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் நீதித்துறை அமைப்பின் அனைத்து சகோதரர்கள் மற்றும் இந்திய குடிமக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார், மேலும் மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கும் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
“நீதித்துறை நமது ஜனநாயகத்தின் பாதுகாவலராகக் கருதப்படுகிறது” என்று பிரதமர் கோடிட்டுக் காட்டினார். இது ஒரு மிகப்பெரிய பொறுப்பு என்று குறிப்பிட்ட திரு மோடி, இந்தத் திசையில் தனது பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றுவதில் உச்சநீதிமன்றம் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார். சுதந்திரம் அடைந்ததிலிருந்து நீதித்துறை நீதியின் உணர்வை நிலைநிறுத்தி வருவதாகக் குறிப்பிட்ட திரு மோடி, நெருக்கடி நிலை காலத்திலும் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதில் நீதித்துறை முக்கிய பங்காற்றியதற்காக நீதித்துறையைப் பாராட்டினார். அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றம் பாதுகாத்துள்ளது என்றும், தேசிய பாதுகாப்பு பற்றிய கேள்வி எழும் போதெல்லாம், நீதித்துறை தேச நலனை முதன்மையாகக் கருதி இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாத்தது. இந்த அனைத்து சாதனைகளுக்காகவும், இந்த மறக்கமுடியாத 75 ஆண்டுகளுக்காக நீதித்துறையின் அனைத்து புகழ்பெற்ற நபர்களுக்கும் திரு மோடி வாழ்த்து தெரிவித்தார்.
நீதியை எளிதாக்குவதற்காக கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை சுட்டிக்காட்டிய பிரதமர், இயக்க அளவில் நீதிமன்றங்களை நவீனமயமாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளைச் சுட்டிக்காட்டியதுடன், உச்சநீதிமன்றம் மற்றும் நீதித்துறையின் பங்களிப்பையும் எடுத்துரைத்தார். மாவட்ட நீதித்துறைக்கான தேசிய மாநாடு இதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு என்று கூறிய அவர், உச்ச நீதிமன்றமும், குஜராத் உயர்நீதிமன்றமும் இணைந்து ‘அகில இந்திய மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மாநாடு’ ஏற்பாடு செய்ததை நினைவு கூர்ந்தார். நீதியை எளிதாக்குவதற்கு இதுபோன்ற நிகழ்வுகளின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, அடுத்த இரண்டு நாட்களில் விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினைகளை எடுத்துரைத்து, நிலுவையில் உள்ள வழக்குகளை நிர்வகிப்பது, மனித வளங்கள் மற்றும் சட்ட சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகளை எடுத்துரைத்தார். அடுத்த இரண்டு நாட்களில் நீதித்துறை நலன் குறித்த அமர்வும் ஏற்பாடு செய்யப்படுவது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். “சமூக நல்வாழ்வின் மிக முக்கியமான தேவை தனிப்பட்ட ஆரோக்கியம். இது நமது பணி கலாச்சாரத்தில் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க உதவும்” என்று அவர் மேலும் கூறினார்.
எஸ்.சதிஸ் சர்மா