ஏர் மார்ஷல் தேஜிந்தர் சிங், இந்திய விமானப்படையின் துணைத் தளபதியாக இன்று பதவியேற்றுக் கொண்டார். புதிய நியமனத்தின்படி பொறுப்பேற்றுக்கொண்ட பின், புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து உயரிய தியாகம் செய்த துணிச்சல் மிக்க வீரர்களுக்கு ஏர் மார்ஷல் அஞ்சலி செலுத்தினார்.
தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவரான ஏர் மார்ஷல் தேஜிந்தர் 1987 ஜூன் 13 அன்று இந்திய விமானப்படையின் போர்ப் பிரிவில் நியமிக்கப்பட்டார். அவர் 4500 மணிநேரத்திற்கும் மேலாக பறக்கும் திறன் கொண்ட ‘ஏ’ பிரிவு தகுதிவாய்ந்த பயிற்றுவிப்பாளர்.பாதுகாப்பு சேவை பணியாளர் கல்லூரி மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் முன்னாள் மாணவர். போர் படைப்பிரிவு, ரேடார் நிலையம், முதன்மையான போர் தளம் ஆகியவற்றில் பணிபுரிந்த அவர், ஜம்மு-காஷ்மீரில் விமானப்படை காமாண்டிங் அதிகாரியாக இருந்தார். தற்போதைய நியமனத்திற்கு முன், மேகாலயாவின் ஷில்லாங்கில் உள்ள இந்திய விமானப்படையின் கிழக்கு காமாண்டிங் தலைமையகத்தில் மூத்த விமானப் படை அதிகாரியாக இருந்தார்.
அவரது பாராட்டத்தக்க சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக 2007-ம் ஆண்டில் வாயு சேனா பதக்கமும், 2022-ம் ஆண்டில் அதி விஷிஸ்ட் சேவா பதக்கமும் குடியரசுத் தலைவரால் அவருக்கு வழங்கப்பட்டது.
எம்.பிரபாகரன்